இந்தியா

இப்படியொரு புதிய மோசடியா? இன்னும் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருப்பது??

கொல்கத்தாவில் உள்ள மருத்துவர்களைக் குறிவைத்து, புதிதாக தற்கொலை மோசடி ஒன்று நடந்து வருகிறது. இது குறித்து சைபர் பிரிவு காவல்துறையினர் மக்களை எச்சரித்துள்ளனர்.

DIN


கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள மருத்துவர்களைக் குறிவைத்து, புதிதாக தற்கொலை மோசடி ஒன்று நடந்து வருகிறது. இது குறித்து சைபர் பிரிவு காவல்துறையினர் மக்களை எச்சரித்துள்ளனர்.

முன்பு, விடியோ காலில் ஆடைகளின்றி ஒரு நபர் பேசி அதனை போட்டோவாக எடுத்து மிரட்டும் மோசடி நடைபெற்று வந்தது. தற்போதும் நடக்கிறது. என்ன பொதுமக்கள் சற்று எச்சரிக்கையாக இருந்து வருகிறார்கள்.

தற்போது, அதே விடியோ கால் முறையில், மருத்துவர்கள் மற்றும் நடுத்தர சம்பளம் வாங்குவோரைக் குறி வைத்து மோசடியாளர்கள் புதிய மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.

முதலில், ஆன்லைன் மூலம் நேர்காணல் அல்லது ஆலோசனை என்ற பெயரில், விடியோ காலில் ஒரு பெண் யாரேனும் ஒருவரை அழைத்துப் பேசுகிறார். பேசி முடிந்ததும், அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியான செய்திகளுடன் அழைப்பை துண்டிக்கிறார். பிறகுதான் ஆரம்பிக்கிறது துயரம்.

சில மணி நேரங்களில், அழைப்பை மேற்கொண்ட பெண் தற்கொலை செய்து கொண்டதாக, அழைக்கப்பட்ட நபருக்கு போன் வருகிறது. உங்களிடம் பேசிய சில மணி நேரங்களில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று மிரட்டி, தற்கொலை செய்து கொண்டதற்கான மருத்துவச் சான்றிதழும் அனுப்பி வைக்கப்படுகிறது.

நேரடியாக மோசடியாளர்கள் மிரட்டி பணம் கேட்பதெல்லாம் இல்லை. அதற்கும் மேல் சென்று, அடுத்து ஒருவர் காவலர் என்று அழைத்துப் பேசுகிறார். பிறகு, விசாரணைக்கு அழைப்பதாக நீதிமன்ற சம்மனை வாட்ஸ்ஆப்பில் அனுப்புகிறார்கள். நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து தப்பிக்க காவலர் கேட்கும் தொகையை அந்த நபர் கொடுக்க வேண்டியதாகிறது.

இப்படி ஒரு புகாருடன் சைபர் கிரைம் காவல்துறையினரை ஆகஸ்ட் மாதத்தில் தொடர்பு கொண்ட  இருவரும் கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர்களாம். இந்தப் புகாரில் 22 வயதான ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். 

எனவே, இதுபோன்ற தற்கொலை மிரட்டல் மோசடிகளும் நடப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், எந்த மோசடியில் சிக்கிக் கொண்டாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக காவல்துறையினரை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT