இந்தியா

சத்யேந்தர் ஜெயினுக்கு செப். 12 வரை இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு!

DIN

தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தர் ஜெயினுக்கு, மருத்துவ காரணங்களுக்காக செப்டம்பர் 12 வரை இடைக்கால ஜாமீனை நீட்டித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

தில்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சத்யேந்தர் ஜெயின் பணமோசடி வழக்கு தொடா்பாக கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் திஹார் சிறையில் இருந்து வருகிறார். 

இந்த நிலையில், அவரது உடல் நிலை காரணமாக ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. 

இடைக்கால ஜாமீன் முடிவடைந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி பி.கே. மிஸ்ரா முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது உடல்நிலை காரணமாக சத்யேந்தர் ஜெயினின் இடைக்கால ஜாமீனை செப்டம்பர் 12 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

15-இல் வேலூரில் கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியா்

SCROLL FOR NEXT