குஷால் கிஷோர் (கோப்புப் படம்) 
இந்தியா

அமைச்சர் வீட்டில் இறந்து கிடந்த இளைஞர்! மகன் காரணமா?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரான குஷால் கிஷோர் இல்லத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

DIN

உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் இல்லத்தில் இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரான குஷால் கிஷோர் இல்லத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தாகுர்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவரின் பெயர் வினய் ஸ்ரீவத்சவா என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் அதிகாலை 4.15 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். 

உடல் கண்டறியப்பட்ட இடத்தினருகே துப்பாக்கியும் கண்டறியப்பட்டுள்ளது. அந்தத் துப்பாக்கி உரிமம் அமைச்சரின் மகன் விகாஷ் கிஷோரின் பெயரில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும், தடயவியல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விசாரணையில் மேலும் சில தகவல்கள் தெரியவரும் எனவும் காவல் துறையினர் குறிப்பிட்டனர். 

உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ஆதரவாக இருப்பேன் என அமைச்சர் குஷால் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும், இளைஞரிக் கொலைக்கு காரணமானவர்கள் தப்பிக்க முடியாது. சம்பவம் நடந்தபோது வீட்டில் யார் இருந்தார் என்பதும் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக பேசிய உயிரிழந்த நபரின் சகோதரர், அமைச்சர் குஷால் கிஷோர் இல்லத்தின் என் சகோதரர் உயிரிழந்துள்ளார். என் சகோதரர் அமைச்சர் மகனின் நண்பன். சம்பவம் நடந்தபோது அந்த வீட்டில் 3 பேர் இருந்தனர். ஆனால் அப்போது அமைச்சரின் மகன் விகாஸ் கிஷோர் எங்கு இருந்தார் என்பது தெரியவில்லை. கொலை நடந்த சம்பவ இடத்தில் அமைச்சர் மகனின் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT