இந்தியா

ஆதித்யா-எல்1 விண்ணில் பாய்வதைக் காண 10,000 பேர் முன்பதிவு!

ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்வதைக் காண 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்வதைக் காண  10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து சனிக்கிழமை (செப். 2) காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான 23.40 மணி நேர கவுன்ட்டவுன் வெள்ளிக்கிழமை பகல் 12.10 மணிக்கு தொடங்கியது. 

சந்திரயான் வெற்றியைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்வதைக் காண முன்பதிவு செய்யலாம் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. 

அதன்படி, இன்று விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1 விண்கலத்தைக் காண 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 29-ம் தேதி இணைய முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களில் மொத்த முன்பதிவும் முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT