இந்தியா

பாகிஸ்தான்: 5 பெண் பயங்கரவாதிகள் கைது!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 5 பெண் பயங்கரவாதிகளை போலீஸார் கைது செய்தனர். 

DIN

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 5 பெண் பயங்கரவாதிகளை போலீஸார் கைது செய்தனர். 

பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புத் துறை (சிடிடி) லாகூர் மற்றும் ஷேகுபுராவைச் சேர்ந்த 5 பெண்கள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து ஆயுதங்கள், பணம், தடை செய்யப்பட்ட புத்தகங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

டேஷ் என்ற இயக்கத்தைச் சேர்ந்த இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜமன், ஜாவேரியா, நாடியா, பைசா மற்றும் பக்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தீவிரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

பயங்கரவாத எதிர்ப்புத் துறை ஒரே நேரத்தில் 5 பயங்கரவாத பெண்களை கைது செய்தது இதுவே முதல் முறையாகும். 

கடந்த மாதம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டு இடங்களை குறிவைத்து 20 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT