இந்தியா

ஆதித்யா -எல்1: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கர்நாடக ஆளுநர் வாழ்த்து!

ஆதித்யா -எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

DIN

ஆதித்யா -எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து சனிக்கிழமை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 

விண்ணில் செலுத்தப்பட்டு ஒரு மணி நேரம் 12 நிமிடங்களுக்குப் பின், ராக்கெட்டிலிருந்து ஆதித்யா விண்கலம் பிரிந்து தனது தனித்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

ஆதித்யா எல்-1 விண்கலம் செலுத்தியதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்கலமான ஆதித்யா எல்1 திட்டத்தை இஸ்ரோ வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை அறிவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT