ஆதித்யா -எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து சனிக்கிழமை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
விண்ணில் செலுத்தப்பட்டு ஒரு மணி நேரம் 12 நிமிடங்களுக்குப் பின், ராக்கெட்டிலிருந்து ஆதித்யா விண்கலம் பிரிந்து தனது தனித்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | விண்ணில் ஏவப்பட்டது ஆதித்யா எல்-1 விண்கலம்!
ஆதித்யா எல்-1 விண்கலம் செலுத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி இதுகுறித்து, சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு, இந்தியா தனது விண்வெளிப் பயணத்தைத் தொடர்கிறது.
சூரியனுக்கு முதல்முறையாக அனுப்பும் இந்தியாவின் ஆதித்யா -எல்1 விண்கலத்தின் வெற்றிகரமான ஏவுதலுக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
மனிதகுலத்தின் நலனுக்காக பிரபஞ்சத்தைப் பற்றிய சிறந்த புரிதலை மேம்படுத்த நம் அறிவியல் முயற்சிகள் தொடரட்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.