தில்லியில் புறநகர் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி பைரன் மார்க் அருகே புறநகர் ரயிலின் பெட்டி ஒன்று இன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதுகுறித்து ரயில்வே காவல் துணை ஆணையர் கூறியதாவது, புறநகர் ரயில் பெட்டி தடம்புரண்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். பழுது பார்க்கும் பணிக்காக ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தில்லியில் புறநகர் ரயில் பெட்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.