10 ஏ320 நியோ ரக விமானங்களை வாங்கும் இண்டிகோ நிறுவனம்!
இண்டிகோ நிறுவனம் சார்பில் கூடுதலாக 10 ஏ320 நியோ ஃபேமிலி விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளது.
இண்டிகோ நிறுவனம் சார்பில் கூடுதலாக 10-ஏ320 நியோ ஃபேமிலி விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, மேலும் 10 ஏ320 நியோ ஃபேமிலி ரக விமானங்களை ஆர்டர் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த விமானங்கள் ஏற்கனவே விமான நிறுவனத்தால் ஆர்டர் செய்யப்பட்ட சுமார் 1,000 விமானங்களுடன் கூடுதலாக இது இருக்கும் என தெரிவித்துள்ளது.
ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 500 குறுகிய விமானங்களை வாங்குவதற்கான உறுதியான ஆர்டரை வழங்கியுள்ள இண்டிகோ நிறுவனம், இது குறித்த அறிவித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த முடிவுக்கு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. அதே வேளையில். இண்டிகோ போல் இதுவரை எந்த விமான நிறுவனமும் இத்தனை பெரிய ஆர்டரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர் குளோப் ஏவியேஷன் இன்று நடந்த அதன் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், ஏர்பஸ் நிறுவனத்துடன் கூடுதலாக 10 ஏ 320 நியோ விமானங்களுக்கான ஆர்டரை வழங்க ஒப்புதல் அளித்ததாகவும், இதனை கொள்முதல் ஒப்பந்தத்தில் திருத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவும் ஒப்புதலும் அளிக்கப்பட்டது.
ஜூன் 19 அன்று, 500 ஏர்பஸ் ஏ 320 விமானங்களுக்கு உறுதியான ஆர்டரை வழங்கியதன் மூலம் அதன் நீண்டகால எதிர்காலத்தை, இண்டிகோ வரையறுப்பதாக தெரிவித்துள்ளது.
தற்போது இண்டிகோ நிறுவனம் 300-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.