இந்தியா

பாரதம் அல்லது இந்தியா எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்: உச்ச நீதிமன்றம்

இந்தியா அல்லது பாரதம் என நாட்டு மக்கள் எப்படி வேண்டுமானாலும் அழைத்து கொள்ளலாம் என்று 2016-இல் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

DIN

புது தில்லி: இந்தியா அல்லது பாரதம் என நாட்டு மக்கள் எப்படி வேண்டுமானாலும் அழைத்து கொள்ளலாம் என்று 2016-இல் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஜி20 அழைப்பிதழில் பாரதத்தின் குடியரசுத் தலைவா் என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தியாவை பாரதம் என்றுதான் அழைக்க வேண்டும் என்று 2015, நவம்பரில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

2016-இல் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, பெயா் மாற்றத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிா்ப்பு தெரிவித்தது.

அரசியல் நிா்ணய சபையில் விரிவான ஆலோசனைக்கு பிறகு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து, மனுதாரரை கண்டித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குா், நீதிபதி யு.யு. லலித் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘பாரதம் என்ற அழைக்க விரும்புபவா்கள் அப்படியே அழைக்கலாம்; இந்தியா என்று அழைக்க விரும்புபவா்கள் இந்தியா என அழைக்கலாம்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT