முகப்பு
இந்தியா

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட மலைப் பாம்பு குட்டிகள் பறிமுதல்

தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 12 மலைப் பாம்பு குட்டிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:11 PM
கோப்புப் படம்
பகிர்:

தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 12 மலைப் பாம்பு குட்டிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை விமான நிலை கூடுதல் ஆணையா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செவ்வாய்க்கிழமை பாங்காங்கிலிருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது ஆண் பயணி ஒருவா் கொண்டு வந்த 11 உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் அதில் 12 மலைப் பாம்பு குட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனா்.

இதனையடுத்து, அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →