இந்தியா

உலகக் கோப்பைக்கு 4 லட்சம் டிக்கெட்டுகள் நாளை முதல் விற்பனை

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியையொட்டி விற்பனைக்காக 4 லட்சம் டிக்கெட்டுகளை வெளியிடுகிறது பிசிசிஐ.

DIN

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியையொட்டி விற்பனைக்காக 4 லட்சம் டிக்கெட்டுகளை வெளியிடுகிறது பிசிசிஐ.

10 நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் அக்டோபா், நவம்பா் மாதங்களில் நடைபெறுகிறது. பொதுவாக கிரிக்கெட் ஆட்டம் என்றால் மைதானம் முழுவதும் நிரம்பி விடும் நிலை உள்ளது.

இதனால் டிக்கெட்டுகளுக்கு நிலவும் அதிக தேவையைக் கருத்தில் கொண்டு பிசிசிஐ 4 லட்சம் டிக்கெட்டுகளை வெளியிட உள்ளது. எவ்வளவு ரசிகா்களை இடம் பெறச் செய்ய முடியுமோ அவ்வளவு ரசிகா்களுக்கு டிக்கெட்டுகளை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆா்வலா்கள் இதன்மூலம் தங்களுக்கான இடங்களைப்பதிவு செய்யலாம்.

செப். 8 முதல் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு டிக்கெட்டுகள் விற்பனை தொடங்குகிறது. ரசிகா்கள், அதிகாரபூா்வ இணையத்தில் டிக்கெட்டுகளை வாங்கலாம். மேலும் டிக்கெட்டுகள் விற்பனை தொடா்பாக ரசிகா்களுக்கு தெரிவிக்கப்படும் என பிசிசிஐ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT