மம்தா பானர்ஜி 
இந்தியா

ஆளுநர் உத்தரவை பின்பற்றினால் கல்லூரிகளுக்கான நிதி நிறுத்தப்படும்!

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸின் உத்தரவை பின்பற்றினால் கல்லூரிகளுக்கான நிதி நிறுத்தப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DIN

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸின் உத்தரவை பின்பற்றினால் கல்லூரிகளுக்கான நிதி நிறுத்தப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநில அரசுடன் ஆலோசிக்காமல் 16 பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால துணை வேந்தர்களை மேற்கு வங்க ஆளுநர் நேரடியாக நியமனம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் செவ்வாய்க்கிழமை பங்கேற்று பேசிய மம்தா பானர்ஜி, ஆளுநரின் உத்தரவை பின்பற்றும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிரியர் தினவிழாவில் மம்தா பானர்ஜி பேசியது:

இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பலமுறை ஆளுநரிடம் கூறியுள்ளேன். நாங்கள் நிதி ஒதுக்கீடு செய்து விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம். நீங்கள் அதில் தலையிடுகிறீர்கள். நள்ளிரவில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மாற்றப்பட்டதை இதுவரை கேட்டதுண்டா?

தொடர்ந்து பல்கலைக்கழகம், கல்லூரிகள் விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டால் அல்லது கல்லூரிகள் ஆளுநரின் உத்தரவை பின்பற்றினால் மாநில அரசின் நிதிகள் நிறுத்தப்படும். அதன்பிறகு ஆசிரியர்களுக்கு எவ்வாறு சம்பளம் தருவார்கள் என்று பார்க்கலாம். இந்த முறை சமரசம் என்பது மட்டும் கிடையாது.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT