இந்தியா

இந்தியா கேட் அருகே நடைப்பயிற்சி செய்ய வேண்டாம்!

ஜி-20 மாநாட்டையொட்டி இந்தியா கேட் அமைந்துள்ள பகுதி முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வர வேண்டாம்

DIN

தில்லியிலுள்ள இந்தியா கேட் எனப்படும் இந்தியாவின் நுழைவு வாயில் அருகே நடைப்பயிற்சியோ, சைக்கிள் பயிற்சியோ மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஜி-20 மாநாட்டையொட்டி இந்தியா கேட் அமைந்துள்ள பகுதி முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய காவல் துறை சிறப்பு ஆணையர் எஸ்.எஸ். யாதவ், இந்தியா கேட் மற்றும் ராஜ பாதை அருகே பொதுமக்கள் நடைப்பயிற்சியோ, சைக்கிள் பயிற்சியோ மேற்கொள்ள வேண்டாம். அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோன்று அதிகாலை 4 மணிமுதல் ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கிறேன். இதனால் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கலாம் எனக் குறிப்பிட்டார். 

2023ஆம் செப்டம்பர் 09 மற்றும் 10ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டையொட்டி தில்லி நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT