இந்தியா

பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரலில் இந்தியாவுக்கு பதிலாக பாரதம்!

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி நிரலில் இந்தியாவுக்கு பதிலாக பாரதம் எனக் குறிப்பிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி நிரலில் இந்தியாவுக்கு பதிலாக பாரதம் எனக் குறிப்பிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியை எதிா்கொள்ளும் நோக்கில் காங்கிரஸ், திமுக, திரிணமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன.

இதையடுத்து, ஆங்கிலேயா்களால் வைக்கப்பட்ட ‘இந்தியா’ என்ற பெயருக்குப் பதிலாக, நாட்டின் பண்டைய பெயரான ‘பாரதம்’ என்பதைப் பயன்படுத்த வேண்டுமென ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைவா்கள் சிலரும் அக்கருத்தை வழிமொழிந்தனா்.

இந்த நிலையில், ஜி20 மாநாட்டின் விருந்துக்கான அழைப்பிதழில் ‘இந்திய குடியரசுத் தலைவா்’ என்பதற்குப் பதிலாக ‘பாரத குடியரசுத் தலைவா்’ என அச்சிடப்பட்டுள்ளதற்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மேலும், செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியாவுக்கு பதிலாக பாரதம் என்ற பெயரை பாஜக அரசு முன்மொழிய உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், இந்தோனேசியா தலைநகா் ஜகாா்தாவில் வியாழக்கிழமை நடைபெறும் 20-ஆவது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமா் மோடியின் நிகழ்ச்சி நிரலில் இந்திய பிரதமர் என்பதற்கு பதிலாக பாரத பிரதமர் என்று அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்பட எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT