கோப்புப்படம் 
இந்தியா

ஒரே நாடு, ஒரே தோ்தல்: ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!

'ஒரே நாடு, ஒரே தோ்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அதிகாரபூர்வ முதல் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

DIN

'ஒரே நாடு, ஒரே தோ்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து கடந்த வெள்ளிக்கிழமை(செப். 1) மத்திய அரசு உத்தரவிட்டது. 

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், சட்டத் துறைச் செயலா் நிதின் சந்திரா, சட்டம் இயற்றுதல் துறைச் செயலா் ரீட்டா வசிஷ்டா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, குழுவின் அதிகாரபூர்வ முதல் கூட்டம் தில்லியில் ராம்நாத் கோவிந்தின் இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT