பிரதமர் மோடி. 
இந்தியா

உதயநிதியின் சனாதன கருத்துக்கு இரு சொற்களில் அறிவுறுத்திய பிரதமர்!

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு இரு சொற்களில் "அளவுடன் எதிர்வினையாற்றுமாறு" பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

புதுதில்லியில் ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு இரு சொற்களில் "அளவுடன் எதிர்வினையாற்றுமாறு" பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்கள் கூட்டத்தில்,  "வரலாற்றை ஆராயாமல், அரசியலமைப்பில் உள்ள உண்மை தகவலை பேசுங்கள். சனாதன சர்சைக்கு தற்கால சூழல் குறித்தும் பேசுங்கள்” என்று அமைச்சர்களிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பாரதம் குறித்த சர்சை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி தனது அமைச்சர்களை எச்சரித்ததாகவும், அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று அறிவுறுத்தியாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை டெங்கு, கரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். 

மேலும், சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஒழிக்க வேண்டும் என்ற தலைப்பு பொருத்தமானது என்றும், டெங்கு, மலேரியா, கரோனா போன்றவற்றை எதிர்க்கக்கூடாது ஒழிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு பேசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மேலும், புது தில்லியில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு அளிக்கும் விருந்துக்கான அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக, பாரத குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT