முகப்பு
இந்தியா

ஜி20 விருந்தினர்களுக்கு தங்கம், வெள்ளி பாத்திரங்களில் உணவு!

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய விருந்தினர்களுக்கு தங்கம், வெள்ளிபாத்திரங்களால் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
பகிர்:

தில்லி: ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய விருந்தினர்களுக்கு தங்கம், வெள்ளிகளால் ஆன பாத்திரங்களால் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜி20 உச்சி மாநாடு தில்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பாரத் மண்டபத்தில் செப்டம்பா் 9, 10 ஆகிய இரு நாள்கள் நடக்கிறது. இதற்கு வருகை தரும் 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தலைவா்கள் தில்லியில் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குகின்றனா்.

பாதுகாப்பு கருதி அமெரிக்கா, கனடா, சீனா போன்ற நாடுகளின் தலைவா்கள் ஐடிசி, தாஜ் போன்ற முழு நட்சத்திர ஹோட்டலை தனியாக எடுத்து தங்குகின்றனா். நிகழாண்டு சா்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக கொண்டாடப்படும் நிலையில், இவா்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில், புதுமையான தினை உணவு வகைகளைக் கொண்டு சா்வதேச தலைவா்களுக்கு உணவுகளை பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக் போன்ற உலகின் முக்கியத் தலைவர்களுக்கு வெள்ளி தட்டுகள், குவளைகள் போன்ற பாத்திரங்களாலும், தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரங்களாலும் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக 15,000 பாத்திரங்களை ஜெய்ப்பூரை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த பணிகள் கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த பாத்திரங்களை 200 கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர்.

பாரத் மண்டபத்திலும், நட்சத்திர விடுதிகளிலும் முக்கிய தலைவர்களுக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த பாத்திரங்களில்தான் உணவு பரிமாறப்படவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →