உத்தரப் பிரதேசத்தின் மீரட் பகுதியில் மகனின் உடலை தள்ளுவண்டியில் இழுத்துக்கொண்டு மணிக்கணக்கில் நடந்துசென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் உள்ள மதுக்கடை அருகே இறந்து கிடந்தார். அவரது தாயும் தம்பியும் அவரைத் தேடி வருவதற்கு முன்னே அவரது உடல் பல மணி நேரமாக மதுக்கடை அருகே இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர், ராஜுவின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல வாகன உதவியை நாடினர். ஆனால் பல மணி நேரம் ஆகியும் உடலை எடுத்துசெல்ல எந்த வாகனமும் கிடைக்கப்பெறவில்லை.
இனால், ராஜுவின் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி அவரது தாயும், தம்பியும் பல மணி நேரம் கொண்டு சென்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இறுதிச் சடங்குகளைச் செய்ய சாலையில் வழிப்போக்கர்களிடம் நிதியுதவி கோரியுள்ளனர். ஆனால் எந்த உதவியும் கிடைக்காததால், மனமுடைந்த தாய்-மகன் இருவரும் உதவிக்காக அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகினர். அங்கு பணியிலிருந்த துணை ஆய்வாளர் அமித்குமார் மாலிக், நிதி திரட்டி இறந்தவரின் இறுதிச் சடங்குகளை செய்திட உதவி செய்தார்.
இளைஞர் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற விடியோ வைரலானதைத் தொடர்ந்து மீரட் தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன், இறந்தவர்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல வானம் கிடைக்காதது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.