முகப்பு
இந்தியா

கடன் தொல்லையால் 5 நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்த தம்பதி

கேரளத்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று, கடன் தொல்லை காரணமாக, 5 நட்சத்திர விடுதியில் அறை எடுத்துத் தங்கி தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
கோப்புப்படம்
பகிர்:

திருவனந்தபுரம்: கேரளத்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று, கடன் தொல்லை காரணமாக, 5 நட்சத்திர விடுதியில் அறை எடுத்துத் தங்கி தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.

இதே 5 நட்சத்திர ஹோட்டலில்தான், அவர்களது ஒரே பெண்ணுக்கு, மிகக் கோலாகலமாகத் திருமணமும் நடந்துள்ளது.

இதில், மற்றொரு திருப்பம் என்னவென்றால், சில மாதங்களுக்கு முன்பே, இதே ஹோட்டலில் அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மீட்கப்பட்டனர் என்பதுதான்.

சுகந்தன் (70), மனைவி சுநீலா(60) இருவரும் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கேரளம் திரும்பி, சொத்துகளை வாங்கி, சொந்த தொழில் செய்து வந்தனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை அதிகரித்து, அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஓணம் பண்டிகையின்போது, இந்த ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். பிறகு, கடந்த புதன்கிழமை இவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சாகும் முன்பு தற்கொலை குறிப்பையும் எழுதி வைத்துள்ளனர். கடன் தொல்லையே தற்கொலைக்கு காரணம் என்றும், யாரும் எங்கள் இந்த முடிவுக்குக் காரணமில்லை என்றும். எங்கள் மகளை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் எழுதியிருந்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →