கோப்புப்படம் 
இந்தியா

திரிபுரா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

திரிபுரா மாநிலத்தில் இரண்டு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

DIN


திரிபுரா மாநிலத்தில் இரண்டு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் தன்புர் மற்றும் போக்ஸாநகர் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை காலை முதல் எண்ணப்பட்டன.

போக்ஸாநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் டஃபஜ்ஜல் ஹொசைன் 30,237 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு 66 சதவீதம் வாக்காளர்கள் சிறுபான்மையினர். 

இவர் 34,146 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், சிபிஎம் வேட்பாளர் வெறும் 3,909 வாக்குகள் பெற்றிருந்தார். 

தன்புர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிந்து தேவ்நாத் 18,871 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தேவ்நாத் 30,017 வாக்குகள் பெறிருந்த நிலையில், சிபிஎம் வேட்பாளர் 11,146 வாக்குகளையே பெற்றிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் உழவா் திருநாளைப்போல: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்கள்!

பாலக்கோட்டில் வரலாற்று நூல்கள் வெளியீடு

பொங்கல்: தருமபுரி வாரச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கோவையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

பாளை. சிறையில் கைதி தற்கொலை முயற்சி?

SCROLL FOR NEXT