இந்தியா

சந்திரபாபு நாயுடு கைது: ஆந்திரத்தில் பேருந்து போக்குவரத்து பாதிப்பு

DIN


ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் சிஐடி காவல்துறையினரால், தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது நடவடிக்கையைத் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடக்கலாம் என்ற அச்சத்தில், பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்திலிருந்து ஆந்திரம் செல்லும் பேருந்துகள், இரு மாநில எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து திருப்பதி செல்லும் பக்தர்களும், திருப்பதியிலிருந்து தமிழகம் திரும்ப வேண்டிய பக்தர்களும், பேருந்துகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் பாதுகாப்பு  கருதி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் திருத்தணி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.  இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT