இந்தியா

கேரளம்: மத்திய சிறையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த கைதி தப்பியோட்டம்

விய்யூர் மத்திய சிறையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

DIN

விய்யூர் மத்திய சிறையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்தவர் கோவிந்த் ராஜ்(52). இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தண்டனை பெற்று விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தோட்ட வேலைக்காக கைதிகளை பிரதான வளாகத்தில் இருந்து சிறை வளாகத்தின் தோட்டப் பகுதிக்கு இன்று அழைத்துச் சென்றனர். 

அப்போது கோவிந்த் சிறையில் இருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்த சிறைத்துறை அதிகாரிகள், தப்பியோடிய கைதியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காவலர்கள் கண்டுகொள்ளாத சமயத்தில் அவர் தப்பியோடிவிட்டதாக விய்யூர் போலீசார் தெரிவித்தனர்.

விய்யூர் மத்திய சிறையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் கேரளத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT