சந்திரபாபு நாயுடு 
இந்தியா

சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக்காவலா? நீதிமன்றம் நிராகரிப்பு!

சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

DIN


சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.371 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில், குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சந்திரபாபு நாயுடு பலனடைந்திருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இந்த வழக்கை விசாரித்த விஜயவாடா ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், சந்திரபாபுவுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, விஜயவாடா அருகே அமைந்துள்ள ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததன் காரணமாக ஜாமீன் வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தரப்பில் விஜயவாடா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிறையில் அடைப்பதற்கு பதில் வீட்டுக்காவலில் வைக்கக்கோரியும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனுவை விஜய்வாடா நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் வீட்டுக்காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT