Manohar Lal Khattar 
இந்தியா

நூ வன்முறை: பலியான இளைஞரின் குடும்பத்தினரோடு ஹரியாணா முதல்வர் சந்திப்பு

ஹரியாணாவின் நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் கொல்லப்பட்ட இளைஞர் அபிஷேக் வீட்டிற்கு முதல்வர் மனோர்கர் லால் கட்டார் வருகை தந்து அவரது குடும்பத்தினரைச் சந்தித்தார். 

DIN

ஹரியாணாவின் நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் கொல்லப்பட்ட இளைஞர் அபிஷேக் வீட்டிற்கு முதல்வர் மனோர்கர் லால் கட்டார் வருகை தந்து அவரது குடும்பத்தினரைச் சந்தித்தார். 

ஜூலை 31ல் நூ மாவட்டத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத்(விஹெச்பி) ஊா்வலத்தில் நடைபெற்ற வகுப்புவாத மோதல்களைத் தொடர்ந்து நூஹ் மாவட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் ஊர்காவல் படையினர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 போலீஸார் காயமடைந்தனர். 

இந்த கலவரம் தொடர்பாக இதுவரை 510 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 130-140 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஹரியாணா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறினார். 

இந்த நிலையில் வகுப்புவாத மோதல்களில் ஏற்பட்ட வன்முறையில் பலியான 6 பேரில் ஒருவரான இளைஞர் அபிஷேக் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினரை முதல்வர் சந்தித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT