இந்தியா

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: மூவர் சுட்டுக் கொலை!

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் இன்று(செப்.12) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

DIN

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் இன்று(செப்.12) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

கடந்த மே மாதம் முதல் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நீடித்து வருகிறது. பழங்குடி அந்தஸ்து வழங்கக்கோரி மைதேயி சமூகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு கூகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூகி பழங்குடியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட சம்பவமும் பெரும் கலவரம் வெடித்தது. 

இந்த நிலையில், வன்முறை சற்று தணிந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய கலவரம் நிகழ்ந்து வருகின்றது. அதன்படி, கங்குய் பகுதியில் உள்ள இரெங் மற்றும் கரம் வைபேய் கிராமங்களுக்கு இடையே நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்கள் மூவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் காலை 8.20-க்கு நிகழ்ந்துள்ளது. 

செப்டம்பர் 8 அன்று தெங்னௌபல் மாவட்டத்தில் உள்ள பல்லேல் என்ற இடத்தில் மூவர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் வன்முறை தொடர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT