இந்தியா

அனைத்துக் கட்சிக் கூட்டம்: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடக் கூடாது என தீர்மானம்

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

DIN

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டுக்கும் காவிரிக்கும் இடையே பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடகம் தர மறுப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டி வருகிறது. 

இந்நிலையில் காவிரி நீர் பிரச்னைகளுக்காக அமைக்கப்பட்ட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 86-ஆவது கூட்டம் குழுவின் தலைவா் வினித் குப்தா தலைமையில் மெய்நிகா் வழியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதில், காவிரியில் அடுத்த 15 தினங்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு திறந்துவிட தண்ணீர் இல்லை என்று கூறி வருகிறது. 

இந்நிலையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT