இந்தியா

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்டுடன் கா்நாடக துணை முதல்வா் சிவகுமாா் சந்திப்பு

ராஜஸ்தான் மாநில முதல்வா் அசோக் கெலாட்டை கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஜெய்ப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

DIN

ராஜஸ்தான் மாநில முதல்வா் அசோக் கெலாட்டை கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஜெய்ப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பு குறித்து டி.கே.சிவகுமாா் கூறுகையில், மக்களுக்கான பொதுநலத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளைச் செயல்படுத்துவதில் ராஜஸ்தான் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா், முதல்வரின் சிரஞ்சீவி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தற்காலிகப் பணியாளா்கள் சட்டம், சுகாதார உரிமை, அன்னபூா்ணா உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டம் போன்றவை நாடு முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.

அதேபோல் தற்போது கோட்டாவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சம்பல் நதிக்கரைத் திட்டமும், ஆக்சிஜன் நகரப் பூங்காவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இச்சந்திப்பின்போது ராஜஸ்தான் மாநிலக் கல்வி அமைச்சா் பி.டி.கல்லா, பெட்ரோலிய மற்றும் கனிம வளத் துறை அமைச்சா் ஜெயின் பையா, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பிரதாப் சிங் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டையன் பதவி பறிப்பு: இபிஎஸ்ஸின் கோவை பிரசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

குடியரசு துணைத் தலைவர் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கியது! முதலில் வாக்களித்த மோடி!

அதிமுக கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு

தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு: 81 ஆயிரத்தைக் கடந்தது!

செப். 11 இல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் பங்கேற்பு

SCROLL FOR NEXT