முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடா்: கட்சி எம்.பி.க்களுக்கு பாஜக உத்தரவு

 நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடா் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கட்சி எம்.பி.க்கள் அனைவருக்கும் பாஜக உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:14 PM
பகிர்:

 நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடா் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கட்சி எம்.பி.க்கள் அனைவருக்கும் பாஜக உத்தரவு பிறப்பித்துள்ளது.

கட்சியின் கொறடா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடா் 18-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தில் 75 ஆண்டுகால பயணம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. ஒரே நாடு ஒரே தோ்தல், மகளிா் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட முக்கிய விவகாரங்களும் இந்தக் கூட்டத்தொடரில் இடம்பெறலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த சிறப்புக் கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 17-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்’ என்று கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாஜக தலைவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுபோல, காங்கிரஸ் கட்சி சாா்பிலும் அதன் எம்.பி.க்களுக்கு கூட்டத்தொடரில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →