இந்தியா

செப். 18ல் காவிரி மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம்!

DIN

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் வரும் செப்.18 ஆம் தேதி கூடுகிறது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெறவுள்ளது. வரும் 21 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், வரும் 18 ஆம் தேதி காவிரி மேலாண்மை கூடுகிறது.

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் நேற்று மத்திய நீர்வளத் துறை அமைச்சரவை சந்தித்து, தமிழகத்திற்கு நீர் திறக்க நிர்பந்திக்கக் கூடாது என்று கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் கோரிக்கை வைத்தார்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை (செப்.18) கூடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

SCROLL FOR NEXT