இந்தியா

பிகாரில் பாஜக பேரணி: அமித் ஷா உரை

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜாஞ்சர்பூரில் மாபெரும் பேரணியில் இன்று உரையாற்றுகிறார். 

DIN

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜாஞ்சர்பூரில் மாபெரும் பேரணியில் இன்று உரையாற்றுகிறார். 

தர்பங்கா விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சரை கட்சியின் மாநில தலைவர் சாம்ராட் சௌத்ரி தலைமையில் பாஜக மூத்த தலைவர்கள் வரவேற்றனர். 

மத்திய உள்துறை அமைச்சரின் வருகையையொட்டி பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ட்ரோன் விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 

ஷா சனிக்கிழமை மதியம் தர்பங்கா விமான நிலையத்தைச் சென்றடைவார். பின்னர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் ஜான்ஜர்பூருக்குச் செல்வார் எனக் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார். 

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், பாஜக முன்னாள் தலைவர் சஞ்சய் ஜ்ய்வால், தர்பங்கா எம்.பி கோபால் ஜீ தாக்கூர் மற்றும் பல மூத்த மாநில பாஜக தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் மக்கள் பேரணியில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

ஜாஞ்சர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிறகு, உள்துறை அமைச்சர் அராரியா மாவட்டத்தில் உள்ள ஜோக்பானிக்கு புறப்படுகிறார், அங்கு அவர் சஷ்த்ரா  சீமா பாலில் புதிதாக கட்டப்பட்ட வீட்டு வளாகத்தைத் திறந்து வைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீட்டில்16 பவுன் நகைகள் திருட்டு

திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடம் ஒதுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடித்ததாக பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது

12 எம்சிடி வாா்டுகளுக்கு நவ.30-இல் இடைத் தோ்தல்

தில்லியில் மேலும் 621 பள்ளிகளில் தனியாா் துப்புரவு சேவை

SCROLL FOR NEXT