இந்தியா

நிபா வைரஸ் தீவிரப் பணியில் அதிகாரிகள் கொண்ட 19 குழுவினர்: அமைச்சர் தகவல்

நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் அடங்கிய 19 குழுவினர் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

DIN

நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் அடங்கிய 19 குழுவினர் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்ததையடுத்து சோதனையில் அது நிபா தொற்றுதான் என உறுதி செய்யப்பட்டது. 

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உள்ளது. இருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இறந்த இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், மாநில அரசு தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோழிக்கோடு மாவட்டத்தில் பபள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற செப்டம்பர் 24 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நிபா பாதிப்பு குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 

11 பேரின் மாதிரிகள் புணேவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவர்களுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. தற்போது வரை 6 பேருக்கு(இருவர் மரணம்) நிபா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேப்பூர் துறைமுகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுளள்ன. பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதிகாரிகள் அடங்கிய 19 குழுவினர் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

SCROLL FOR NEXT