இந்தியா

மகளிர் இடஒதுக்கீடு: ஒரே வார்த்தையில் சோனியா காந்தியின் பதில்!

DIN

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து 'இது எங்களுடையது' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். 

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் முதல் அலுவலாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது நாளை விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென கட்சிகள் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

காங்கிரஸ் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இன்று மக்களவைக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ' இது எங்களுடையது' என பதிலளித்துள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக கோரிவருவதாகவும் மசோதாவை காங்கிரஸ் வரவேற்பதாகவும் கூறினார். இது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று ப. சிதம்பரம் கூறியிருந்தார். 

இதையும் படிக்க | ஷவர்மாவில் என்ன ஆபத்து?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT