துரைமுருகன் (கோப்புப் படம்) 
இந்தியா

தமிழகத்துக்குத் தண்ணீர் தரும் எண்ணம் துளியும் இல்லை: துரைமுருகன்

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகத்துக்குத் துளியும் இல்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

DIN

புது தில்லி: தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகத்துக்குத் துளியும் இல்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

காவிரி நீர் தொடர்பாக புது தில்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை  சந்தித்துப் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

காவிரியிலிருந்து கர்நாடக அரசு, தமிழகத்துக்கு தர வேண்டிய நீர் குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கிக் கூறினோம். காவிரியில், கர்நாடக மாநிலத்திடம் போதுமான தண்ணீர் இருந்தும்கூட தமிழகத்திற்கு தர மறுக்கிறது. 

காவிரியிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகத்துக்கு துளியும் இல்லை என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட கா்நாடகத்துக்கு உரிய அழுத்தம் தரக் கோரி, தமிழக எம்.பி.க்கள் குழுவினா் தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் மத்திய நீா்வளத் துறை அமைச்சரை இன்று காலை சந்தித்துப் பேசினர்.

இதற்காக, அமைச்சா் துரைமுருகன் சென்னையில் இருந்து புது தில்லிக்கு திங்கள்கிழமை புறப்பட்டாா். விமான நிலையத்தில் அவர் பேசுகையில், உச்சநீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகுதான் ஒவ்வொரு முறையும் கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீா் கிடைக்கிறது. கா்நாடகத்தில் உள்ள தண்ணீா் இருப்பை ஆய்வு செய்து பரிசீலனை செய்த பின்னா்தான் தண்ணீா் திறக்க ஆணையம் உத்தரவிடுகிறது. ஆனால், தண்ணீா் இல்லையென கா்நாடகம் பொய் சொல்கிறது என்று அவா் கூறினாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT