இந்தியா

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அரசியலாக்க முயற்சி: அமித் ஷா

DIN

மகளிருக்கு அதிகாரமளிக்கும் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று(செப். 19) மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து இன்று மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

இதில் பேசிய அமைச்சர் அமித் ஷா, சிலர் வாய்ப்பேச்சாக பேசுகிறார்கள். மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக அரசியல் நோக்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். சரியான கேள்வியாக இருந்தால் நாங்கள் பதில் சொல்வோம். நாங்கள் பேச்சைக் குறைத்து செயலில் காட்டுகிறோம்.
செய்வதையே சொல்கிறோம். இந்தியா மட்டுமல்ல, உலகமே பாராட்டும் வகையில், மகளிர் இடஒதுக்கீட்டை செயல்படுத்து வருகிறது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் நீண்ட பயணம் பாஜக ஆட்சியில் முழுமை பெறுகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சில கட்சிகள் அரசியலாக்கப் பார்க்கின்றனர் எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT