ராகுல் காந்தி 
இந்தியா

எதிர்க்கட்சி வலுவடைவதால் பாஜகவுக்கு அச்சம்: ராகுல் காந்தி!

எதிர்க்கட்சி கூட்டணி பலமடைவதைக் கண்டு பாரதிய ஜனதா கட்சி அச்சமடைந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

DIN

எதிர்க்கட்சி கூட்டணி பலமடைவதைக் கண்டு பாரதிய ஜனதா கட்சி அச்சமடைந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று(செப். 19) மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து இன்று (செப். 20) மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 

இதில் பேசிய ராகுல் காந்தி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றஎதற்காக 8 ஆண்டுகள் தாமதிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். 

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி பிரிவினருக்கான ஒதுக்கீட்டையும் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்த அவர், பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் மூலம் மகளிருக்கு அதிக அதிகாரம் கிடைத்தது எனக் குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ஒருசில நபர்களின் கட்டுப்பாட்டில் நாடு சிக்கிக்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT