இந்தியா

மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜீவ் காந்தியின் கனவு: சோனியா காந்தி பேச்சு

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் தெரிவித்தார். 

DIN

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் தெரிவித்தார். 

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று(செப். 19) மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து இன்று மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 

இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 'மகளிர் இடஒதுக்கீடு மசோதா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கனவு. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் சார்பில் நான் ஆதரிக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது. பல்வேறு துறைகளில் அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள். 

மசோதா நிறைவேற்றப்பட்டு தாமதப்படுத்தாமல் விரைந்து அமலுக்கு கொண்டு வர வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி எஸ்.சி. சமூகப் பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT