முகப்பு
இந்தியா

காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:16 PM
பகிர்:

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. 

கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று  உத்தரவிட்டது. 

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 

முன்னதாக, தில்லியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று(புதன்கிழமை) காலை நடைபெற்றது. இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 

தமிழ்நாட்டிற்கு 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே காவிரி விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை நாளை(செப். 21) உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →