இந்தியா

குடியரசு நாள் விழா: பைடனுக்கு அழைப்பு விடுத்த மோடி!

DIN

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு நாள் விழாவில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கிராசிட்டி புதன்கிழமை இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவின் குடியரசு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்தார். 

இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இருதரப்பு நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையில், இந்தியா - அமெரிக்க நட்புறவு, உலகளாவிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை நிலைநாட்டுவதையும் உறுதி செய்தனர் எனக் குறிப்பிட்டார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT