இந்தியா

குடும்பங்களின் சேமிப்பு 50 ஆண்டுகள் இல்லாத அளவு சரிவு!

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடும்பங்களின் சேமிப்பு குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

DIN

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடும்பங்களின் சேமிப்பு குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2022-23ஆம் ஆண்டில் இந்தியாவின் குடும்பங்களின் மொத்த சேமிப்பானது ரூ.13.77 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 5.1 சதவிகிதமாகும். இது கடந்தாண்டில் 7.2 சதவிகிதமாக இருந்தது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருந்த 2020-2021 காலகட்டத்தில்கூட, அதற்கு முந்தைய ஆண்டின் சேமிப்பு விகிதமான 8.1 சதவீதத்தில் இருந்து 11.5 ஆக உயர்ந்திருந்தது.

அஞ்சல் சேமிப்பு, வங்கிகளில் நிலையான வைப்பு நிதி, சிறு சேமிப்பு, முதலீடுகள் என அனைத்திலும் கடந்த காலத்தை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது.

2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மட்டும் வணிக வங்கிகளிடம் இருந்து வாங்கும் கடன் 54 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல், குடும்பத்தின் சராசரி கடன் 36.9 சதவிகிதத்திலிருந்து நிகழ்வாண்டு 37.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

குடும்பங்களில் சேமிப்பு நிதி குறைந்த போதிலும் கடன் வாங்கும் விகிதம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கடகத்துக்கு யோகம்.. தினப்பலன்கள்!

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு

வேன் மோதி இளைஞா் மரணம்

SCROLL FOR NEXT