இந்தியா

செப்.24 முதல் சென்னை-விஜயவாடா வந்தே பாரத் ரயில் சேவை 

DIN

நெல்லையைத் தொடர்ந்து விஜயவாடாவிற்கும் செப்டம்பர் 24ஆம் தேதி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. 
இதனை பிரதமா் மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். மேலும் விஜயவாடாவில் நடக்கும் தொடக்கவிழாவில் ஆந்திர முதல் ஜெகன்மோகன் ரெட்டி, ஆளுநர் அப்துல் நசீர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதையொட்டி விஜயவாடாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
சென்னை-விஜயவாடா வந்தே பாரத் ரயிலை செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு விஜயவாடா சென்றடையும். 
அதேபோல் விஜயவாடாவில் இருந்து பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு ரயில் சென்னை வந்தடையும். இந்த ரயில் சென்னை-விஜயவாடா இடையே ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல் மற்றும் தெனாலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT