தாணே தொழிற்சாலையில் நைட்ரஜன் வெடித்து விபத்து: 2 பேர் பலி!
மகாராஷ்டிரத்தின், தாணேவில் உள்ள தொழிற்சாலையில் நைட்ரஜன் எரிவாயு வெடித்த விபத்தில் 2 பேர் பலியாகினர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரத்தின், தாணேவில் உள்ள தொழிற்சாலையில் நைட்ரஜன் எரிவாயு வெடித்த விபத்தில் 2 பேர் பலியாகினர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தாணேவில் உள்ள தொழிற்சாலையில் நைட்ரஜன் எரிவாயு கொள்கலனில் நிரப்பும்போது, திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பணியிலிருந்த 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் மேலும் சிக்கியுள்ளனரா என தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.