ஜார்க்கண்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒருவர் பலியாகியுள்ளார். மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை முதல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகின்றது. சாலைகள் வெள்ளக்கடாக மாறியுள்ளது. பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கியதையடுத்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாலமு மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையின்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி இருவரும் காயமடைந்த நிலையில், கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோடெர்மா மாவட்டத்தில் 27 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்தது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மின்கம்பங்கள் விழுந்து மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பகுதிகளான தும்கா, பாகூர், கோடா மற்றும் சாஹேப்கஞ்ச் தவிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையின் தீவிரம் குறைந்துள்ளது.
ஜூன் 1 முதல் செப்டம்பர் 23 வரை மாநிலத்தில் 704.33 மி.மீ மழை பெய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.