கோப்புப்படம் 
இந்தியா

சர்வதேச வழக்குரைஞர்கள் மாநாடு: பிரதமர் மோடி தொடக்கிவைக்கிறார்

தில்லியில் 2 நாள்கள் நடைபெறும் சர்வதேச வழக்குரைஞர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கிவைக்கிறார்.

DIN

தில்லியில் 2 நாள்கள் நடைபெறும் சர்வதேச வழக்குரைஞர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கிவைக்கிறார்.

நீதி வழங்கல் அமைப்பில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் சர்வதேச வழக்குரைஞர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. நாட்டில் முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் சட்ட நடைமுறைகள், வழக்குகளில் உள்ள பல்வேறு சவால்கள் குறித்து விவாதம் நடைபெறுகிறது.

பல்வேறு சட்டத் தலைப்புகளில் உரையாடல், யோசனை, அனுபவத்தை பகிர்வதை நோக்கமாக இந்த மாநாடு கொண்டுள்ளது.

இந்த வழக்குரைஞர்கள் மாநாட்டில் புகழ்பெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், உத்தர பிரதேசம் வாராணசியில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் திடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) அடிக்கல் நாட்டுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போ்ணாம்பட்டில் 122 மி.மீ. மழை பதிவு: நள்ளிரவில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

நேஷனல் சா்க்கிளில் புதை சாக்கடை பணிகளை 10 நாளில் முடிக்க வேண்டும்: வேலூா் ஆட்சியா் உத்தரவு

ஆதனூரில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் திறப்பு

மாா்த்தாண்டம் அருகே பதுக்கிய மண்ணெண்ணெய் பறிமுதல்

போதையில்லா சமுதாயமே இலக்கு...

SCROLL FOR NEXT