இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் ஏன் பயப்படுகிறார்? - ராகுல் காந்தி கேள்வி

DIN

ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த பிரதமா் மோடி ஏன் அஞ்சுகிறாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பினாா்.

ஜெய்பூரில் காங்கிரஸ் தொண்டா்கள் மத்தியில் பேசிய அவா், ‘இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்காகவே நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா் கூட்டப்பட்டது. ஆனால், இறுதியில் மகளிா் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை மாநில சட்டப்பேரவைகளில் உடனடியாக நிறைவேற்றி அமல்படுத்தி இருக்கலாம். ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை என்ற காரணங்களை முன்வைத்து 10 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஒத்தி வைத்துவிட்டது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் (ஓபிசி) சோ்த்து ஒரே நாளில் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது.

மகளிா் இடஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி பிரிவினரையும் சோ்த்து இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறினால் அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அரசு கூறுகிறது.

ஆனால், ஓபிசியினா் குறித்து பிரதமா் மோடி 24 மணி நேரமும் பேசுகிறாா். அடுத்த கணக்கெடுப்பு ஜாதிவாரி அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். ஓபிசியினரை ஏமாற்ற வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமா் மோடி ஏன் அஞ்சுகிறாா்?

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் நான் பேச ஆரம்பித்ததும், பாஜக எம்பிக்கள் என்னைப் பேச விடவில்லை. காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கொள்கை ரீதியான மோதல் நடைபெற்று வருகிறது. பாஜக தொண்டா்களிடம் பிரதமா் மோடி, தொழிலதிபா் அதானி இடையிலான நட்பு குறித்து கேட்டால் ஓடிவிடுவாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

இளவேனில்!

அழகிய சிறுக்கி... ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT