கோப்புப்படம் 
இந்தியா

பிரதமரின் போபால் பேரணிக்குச் சென்ற தனியார் பேருந்து விபத்து: 39 பேர் காயம்!

போபாலில் பிரதமர் நரேந்திர மோடியின் பேரணி நடைபெறும் இடத்திற்குச் சென்ற தனியார் பேருந்து கார்கோன் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த டிரக் மீது மோதியதில் 39 பேர் காயமடைந்தனர். 

DIN

போபாலில் பிரதமர் நரேந்திர மோடியின் பேரணி நடைபெறும் இடத்திற்குச் சென்ற தனியார் பேருந்து கார்கோன் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த டிரக் மீது மோதியதில் 39 பேர் காயமடைந்தனர். 

திங்கள்கிழமை(செப்.25) பிற்பகலில் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் பாஜக தொண்டர்களின் மாபெரும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். 

இந்த நிலையில் கோபால்புரா கிராமம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதாக காவல் துணைப்பிரிவு அதிகாரி தெரிவித்தார். 

காயமடைந்த 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்டது. அதில் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டு இந்தூருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

பிரதமர் உரையாற்ற உள்ள விழாவில் பங்கேற்பதற்காக போபால் சென்றதாகக் காயமடைந்தவர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT