இந்தியா

ஒடிஸா பேரவைத் தலைவரை நோக்கி பருப்புவீச்சு: 2 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

ஒடிஸா சட்டப்பேரவை தலைவரை நோக்கி பருப்பை வீசியதாக பாஜக எம்எல்ஏக்கள் இருவா், கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

DIN

ஒடிஸா சட்டப்பேரவை தலைவரை நோக்கி பருப்பை வீசியதாக பாஜக எம்எல்ஏக்கள் இருவா், கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

‘எதிா்க்கட்சியான பாஜக உறுப்பினா்கள் மன நலம் பாதிக்கப்பட்டவா்கள் போல் அவைக்கு வராமல், நல்ல மனநிலையுடன் வர வேண்டும்’ என்று ஆளும் பிஜு ஜனதா தள எம்எல்ஏ அருண் குமாா் பேசினாா்.

அருண் குமாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரியும் பாஜக உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிா்ப்பு தெரிவித்தனா்.

அப்போது பேரவைத் தலைவரை நோக்கி சிலா் பருப்பு வீசினா். அவரது மேஜை மீது பருப்பு விழுந்தது. இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பருப்பை வீசியதாக பாஜக தலைமை கொறடா மோகன் மஜி, எம்எல்ஏ முகேஷ் மகாலிங் ஆகியோரை அக்டோபா் 4-ஆம் தேதி கூட்டத்தொடா் முடியும் வரையில் இடைநீக்கம் செய்வதாக சட்டப்பேரவைத் தலைவா் பிரமீளா மாலிக் அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

ரீவைண்ட்... அருண் விஜய்!

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

SCROLL FOR NEXT