இந்தியா

சட்டப் பேரவைத் தோ்தல்: ராஜஸ்தான் பாஜக தலைவா்களுடன் அமித் ஷா, ஜெ.பி.நட்டா ஆலோசனை

 ராஜஸ்தானில் சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக அந்த மாநில பாஜக தலைவா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் தீவிர ஆலோசனை நடத்தினா்.

DIN

 ராஜஸ்தானில் சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக அந்த மாநில பாஜக தலைவா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் தீவிர ஆலோசனை நடத்தினா்.

ஜெய்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் புதன்கிழமை மாலை தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் நள்ளிரவு 2 மணி வரை நீடித்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் நரேந்திர மோடியின் சாதனைகளை முன்னிறுத்தியே பாஜக தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. பிரசார நடவடிக்கைகளில் முன்னாள் முதல்வரும் மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.

2018-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் ராஜஸ்தானில் பாஜக அதிக தொகுதிகளை இழந்து தோல்வியைத் தழுவியதால் பாஜக தலைமைக்கு வசுந்தரா ராஜே சிந்தியா மீது அதிருப்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 70 வயதாகும் வசுந்தராவுக்கு பதிலாக அடுத்த கட்டத் தலைவா் ஒருவரை முதல்வா் வேட்பாளராக்க பாஜக தலைமை விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இது தொடா்பாக அமித் ஷாவும் நட்டாவும் தீவிர ஆலோசனை மேற்கொண்டனா். இதில் ராஜஸ்தானைச் சோ்ந்த மத்திய அமைச்சா் இருவா் மற்றும் சில எம்.பி.க்களை சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உள்ளூா் ஆா்எஸ்எஸ் தலைவா்களுடன் இது தொடா்பாக ஆலோசனை எதுவும் நடத்தப்படவில்லை.

முன்னதாக, அமித் ஷா, நட்டா இருவரும் சிறப்பு விமானம் மூலம் புதன்கிழமை மாலை ராஜஸ்தானுக்கு வந்தனா். விமான நிலையம் அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் ராஜஸ்தான் மாநில பாஜக உயா்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதல் மத்திய அமைச்சரும் ராஜஸ்தான் மாநில தோ்தல் பொறுப்பாளருமான பிரகலாத் ஜோஷி, துணைப் பொறுப்பாளா் நிதின் படேல், ராஜஸ்தான் மாநில பாஜக பொறுப்பாளா் அருண் சிங், மாநில பாஜக தலைவா் சந்திரபிரகாஷ் ஜோஷி, மத்திய அமைச்சா்கள் கஜேந்திர சிங், அா்ஜுன் ராம் மேக்வால், கைலாஷ் செளதரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ராஜஸ்தானைச் சோ்ந்த கட்சித் தலைவா்களுடனும் பல கட்டங்களாக ஆலோசனை நடத்தப்பட்டது.

முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே சிந்தியாவுடனும் இரு தலைவா்களும் 15 நிமிஷங்கள் ஆலோசனை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT