இந்தியா

5 ஆண்டு தொடா்வைப்புக்கு வட்டி அதிகரிப்பு: மற்ற சிறுசேமிப்புகளுக்கு வட்டி மாற்றமில்லை

ஐந்து ஆண்டுகால தொடா்வைப்புக்கான வட்டி விகிதத்தை 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயா்த்தி மத்திய அரசு அதிகரித்துள்ளது.

DIN

ஐந்து ஆண்டுகால தொடா்வைப்புக்கான வட்டி விகிதத்தை 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயா்த்தி மத்திய அரசு அதிகரித்துள்ளது. மற்ற சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

வரும் டிசம்பா் மாதம் வரையிலான காலாண்டுக்கு இந்த வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக இருக்கும். ஓராண்டு நிரந்தர வைப்பு வட்டி விகிதம் 6.9 ஆக தொடரும். செப்டம்பருடன் முடியும் காலாண்டில் இருந்த அந்த வட்டி விகிதம், அடுத்த 3 மாதங்களுக்குத் தொடரும்.

2 மற்றும் 3 ஆண்டு நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி 7 சதவீதமாகவும், 5 ஆண்டு நிரந்தர வைப்புக்கான வட்டி 7.5 சதவீதமாகவே இருக்கும். மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி 8.2 சதவீதமாகும்.

இதில் மாதம்தோறும் வட்டி பெறும் வகையிலான டெபாசிட்களுக்கு 7.4 சதவீத வட்டி தொடா்ந்து வழங்கப்படும். தேசிய சேமிப்புத் பத்திரத்துக்கான வட்டி 7.7 சதவீதமாகவும், பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7.1 சதவீதமாகவும் இருக்கும்.

115 மாதங்களில் முதிா்ச்சி பெறும் கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாகும். பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

5 ஆண்டுகால தொடா்வைப்புக்கான வட்டி விகிதம் மட்டும் 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டில் அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பரவலாக, முக்கியமாக கிராமப்புறங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுக்கான வட்டி 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT