முகப்பு
இந்தியா

மகளிா் இடஒதுக்கீடு மசோதா: குடியரசுத் தலைவா் ஒப்புதல்

மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்தாா். 

Updated On : 29 செப்டம்பர் 2023, 6:07 pm IST
பகிர்:

மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்தாா்.
மக்களவை, சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேறியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உதவும் இந்த மசோதாவுக்கு குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தாா். 
இந்த ஒப்புதல் மசோதா பிரதியை ஜகதீப் தன்கரிடம் இருந்து மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
தற்போது அவரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து அந்த மசோதா சட்டமானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.